‘ஜெயிலர் 2’ படத்தில் என்ட்ரி கொடுக்கும் பவன் கல்யாண்? வெளியான புது தகவல்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. வெளியானபின், இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது; அனிருத் இசையமைக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஜூன் மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், ‘கிங்’ திரைப்படத்திற்கான தோற்றத்தில் தற்போது அவர் பிஸியாக இருப்பதால், இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading