ரீ ரிலீஸாகும் மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ திரைப்படம்!

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. காதல் மற்றும் அதிரடி ஆக்ஷனில் உருவான இந்த திரைப்படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரித்தார்; இசையமைப்பாளர் வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி தற்போது 23 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதனை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் திட்டம் இருப்பதாக இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படம் வருகிற 24ஆம் தேதி மறுவெளியீடாக (ரீ-ரிலீஸ்) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களிலும் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading