மிகப்பெரிய தொகைக்கு பேசப்படும் ‘ராமாயணா’ ஓடிடி உரிமம்?

நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் சரித்திரத் திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தின் முதல் பாகம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் ‘ராமா’ டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமையை 700 கோடிக்குக் கேட்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் 1000 கோடி வரை எதிர்பார்க்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இதன் மொத்த பட்ஜெட் 4000 கோடி என்று ஏற்கெனவே தகவல் வெளியாக இருந்தது. அவ்வளவு பட்ஜெட் என்றால் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்ப்பதும் சரிதான் என்கிறார்கள். 500, 600 கோடிகளில் தயாராகும் பான் இந்தியா படங்களின் ஓடிடி உரிமையை அதிகபட்சமாக 150 கோடி கொடுத்து வாங்கும் போது 4000 கோடி பட்ஜெட் படத்திற்கு 1000 கோடி கேட்பது சரிதானே என்றும் சிலர் சொல்கிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading