சினிமா, அரசியல் என இரண்டிலும் மாறி மாறி பயணித்து வந்தாலும் அவ்வப்போது டிவி பக்கமும் போய்விட்டு வருவார் ராஜா. தெலுங்கு, தமிழ், கன்னட டிவி ஷோக்களில் நடுவராகக் பங்கேற்றுள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் டிவி ஷோ ஒன்றில் நடுவராகப் பங்கேற்க உள்ளார். விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 7வது சீசனில் ரோஜாவும் ஒரு நடுவர். இதற்கான முன்னோட்ட வீடியோ ஏற்கெனவே வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா, டிவி ஷோ என இந்தப் பக்கம் வந்தவர் மீண்டும் தெலுங்குப் பக்கமும் போவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
Add a Comment
