பொருளாதார வசதி இல்லாமல் இந்த முடிவை எடுக்காதீர்கள்… நடிகை வரலட்சுமி சரத்குமார் OPEN TALK!

முன்னணி நடிகர் சரத்குமார் அவர்களின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது ‘சரஸ்வதி’ என்ற திரைப்படத்தை அவர் தயாரித்து, இயக்கி, அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த 6ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதற்கிடையில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குழந்தைகள் பெறுவது குறித்து வரலட்சுமி சரத்குமார் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “பொருளாதார வசதி இல்லாமல் ஏன் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறீர்கள்? முதலில் உங்கள் நிதி நிலையை திட்டமிட்டு அமைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகே குழந்தைகள் பற்றி யோசிக்க வேண்டும். குழந்தைகளை பெற்றுக்கொள்வது மிகவும் எளிதான விஷயம். ஆனால் அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பது தான் மிகவும் முக்கியமான பொறுப்பு. இன்றைய காலத்தில் பொருளாதார நிலைமை எப்போது எப்படி மாறும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது.

பலர் குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகு வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்கிறோம் என்று வருந்துகின்றனர். சில சமயங்களில் அந்த குழந்தைகள் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். நான் குழந்தைகளுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் யோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு முதலில் உங்கள் நிதி நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போதுமான வசதி இருந்தால் அதன் பிறகு குழந்தைகளைப் பெறுங்கள். குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகு அவர்களுக்காக மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க வேண்டிய நிலை வரக்கூடாது. என்னுடன் பணியாற்றுபவர்கள் மற்றும் எனக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் நான் எப்போதும் இதைத்தான் கூறி வருகிறேன்,” என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading