‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்தது எனக்கு பெருமை – நடிகர் ரவி மோகன்!

தஞ்சாவூரில்  சமீபத்தில் பிரபலமான தனியார் தங்கநகை கடையின் புதிய ஷோரூமை நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மேடையில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

அப்போது தனது திரைப்படங்களில் இடம்பெற்ற சில அரசியல் வசனங்களை அவர் ரசிகர்களிடம் கூறி காட்டினார். “மக்களை நம்பாதவர் மக்களை ஆள முடியாது. நீ தொழிலுக்காக அரசியல் செய்வவன்; நான் தொழிலையே அரசியலாக செய்வவன்” என்ற பஞ்ச் வசனத்தை அவர் பேசிக் காட்டியபோது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், “தஞ்சாவூருக்கு வந்தவுடன் என்னை ராஜராஜ சோழன் போல பொதுமக்கள் வரவேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. இன்று தஞ்சை மண்ணிற்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. இந்த இடத்துக்கு மீண்டும் மீண்டும் வர வேண்டும் போல உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading