‘ஜெயிலர் 2’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாருக்கான்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் பாராட்டுகளை பெற்ற இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

முதல் பாகத்தில் பல முன்னணி நடிகர்கள் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்ததைப் போலவே ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் பல முக்கிய நடிகர்கள் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் கேமியோ தோற்றத்தில் இந்த படத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகைகள் ராம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். இவர்களின் கதாபாத்திரங்களும் கதையின் முக்கியமான பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்று நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலிவுட்டின் “பாட்ஷா” என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் இந்த படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading