கிஷ்கிந்தா காண்டம்’ என்கிற படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் டிஞ்சித் அய்யத்தன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் இந்த படம் பெற்றது. இதில் நடிகர்கள் வினித், நரேன் ஆகியோரை தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்கள் தான் நடித்திருந்தனர். அதேசமயம் இந்த படத்தின் கதையின் நாயகியாக நடித்திருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற பேராசிரியையான பியானோ மோமின் என்பவரின் நடிப்பு வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.நடிகர் தனுஷ் இந்த படம் பார்த்துவிட்டு அவரது நடிப்பு குறித்து சிலாகித்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளம் ஒன்றில் தனுஷை நேரில் சந்தித்துள்ளார் இயக்குனர் டிஞ்சித் அய்யத்தன். இந்த சந்திப்பின் போது படம் குறித்து விலாவாரியாக பாராட்டிய தனுஷ் எப்படி நடிகை பியானோ மோமினை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தீர்கள் என்கிற தனது ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களது சந்திப்பை தொடர்ந்து டிஞ்சித் அய்யத்தன் டைரக்ஷனில் தனுஷ் நடிப்பாரா என்பது போன்று யூகங்கள் கிளம்பியுள்ளன
Add a Comment
