ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘உஸ்தாத் பகத்சிங்’ இந்த படம் தொடங்கிய காலகட்டத்தில் இது தமிழில் விஜய் நடித்து வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக் என கூறப்பட்டது. இன்னும் சிலரோ ஹிந்தி படம் ஒன்றின் ரீ-மேக் என்றார்கள். இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛இது ரீமேக் படம் இல்லை. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இதுபோன்ற சந்தேகங்கள் வரும். இந்த படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் இதற்கு கதை, வசனமும் நானே எழுதியுள்ளேன்” என ரீ-மேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 26ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
Add a Comment
