புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பெத்தி’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. யு டியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 29.1 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. தற்போது அந்த சாதனையை அதே படத்தின் இரண்டாவது சிங்கிளாக வெளியான ‘ரை ரை ரா ரா’ பாடல் முறியடித்துள்ளது. இப்பாடல் தெலுங்கில் மட்டும் 29.2 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றுள்ளது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 46 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
Add a Comment
