தமிழ் திரைப்படங்களில் பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு உறுதியான ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் சதீஷ். தனது இயல்பான நடிப்பாலும் நேர்த்தியான நகைச்சுவை ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது நடிகர் சுரேஷ் ரவியுடன் இணைந்து ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் வேறுபட்ட கதையமைப்பில் அவர் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை ‘தி மாபோகோஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார். இயக்குநர் பிரவீன் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பலரும் இணைந்திருப்பதால் படத்தில் பல்வேறு வண்ணங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், படம் வரும் மார்ச் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
