புதிய சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா- நடிகை ராஷ்மிகாவின் திருமண புகைப்படம்!

இந்தியப் பிரபலங்கள் பதிவிட்ட பதிவுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2024ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையுடன் பதிவிட்ட புகைப்படத்திற்கு 22 மில்லியன் லைக்குகள் கிடைத்தது. அது ஆசிய அளவிலும், இந்திய அளவிலும் சாதனை படைத்து முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையைத் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திருமணப் புகைப்படப் பதிவு முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று காலை பதிவிடப்பட்ட அந்தப் பதிவு அதற்குள்ளாக 24 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது. அதே புகைப்படங்களைப் பதிவிட்ட அவரது கணவர் விஜய் தேவரகொண்டாவின் பதிவிற்கு 18 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading