சர்வதேச கிரிக்கெட் நடுவராக இருப்பவர் அனில் சவுத்ரி. இவர் தற்போது நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். ஹரியான்வி கேங்ஸ்டர் கீதமான கோலி தோ சலேகி என்ற இசை ஆல்பம் மூலமாக நடிப்பு களத்தில் இறங்கியுள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சுமன் குஹா இயக்கியுள்ளார். எபிக் பிலிம்ஸ் சார்பில் நரேஷ் ஜா தயாரித்துள்ளார்.டயமண்ட் என்பவர் பாடிய இந்த இசை வீடியோ, சினிமா பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரோஹித் கர்ப், சாந்தினி ரவுத், ஹேமேஷ் தீட்சித் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்
Add a Comment
