ஒரு வருடத்தை நிறைவு செய்த ‘டிராகன்’ திரைப்படம்… இரண்டாம் பாகம் உருவாகிறதா? பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட்!

‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டிராகன்’. இந்த படத்தில் ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ போன்ற திரைப்படங்களை இயக்கியதுடன் நடிகராகவும் கவனம் பெற்ற பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான முதல் பத்து நாட்களுக்குள் ரூ.100 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸ் பணியாற்றி இருந்தார். இப்படத்தில் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் மிஷ்கின், மேலும் யூடியூப் மூலம் பிரபலமான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  லியோன் ஜேம்ஸ் அமைத்த இசையில் வெளியான பாடல்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. 

‘டிராகன்’ திரைப்படம் வெளியாகி இன்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் வலைததளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நண்பனாக இருந்து இயக்குநராக மாறுவதற்கு தமக்கு சிறிது காலம் எடுத்துக்கொண்டது என்றும், தற்போது அந்த இரண்டு அனுபவங்களிலும் சிறந்ததை பெற்றுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு விரைவில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகும் என இரண்டு டிராகன் இருப்பது போன்ற புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். இது ‘டிராகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் எனவும் விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது‌.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading