என்னைப் பற்றிய வதந்திகள் மிகவும் வேதனை அளிக்கின்றன – நடிகை மீனா OPEN TALK!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். 1990களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த மீனா, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.

மீனா தனது கணவர் வித்யாசாகரை 2022ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக இழந்தார். 48 வயதில் அவர் காலமானது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தனது மகளுடன் வாழ்ந்து வரும் மீனா குறித்து, சமீப காலமாக இரண்டாவது திருமணம் தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில், ‘ரோஸ்லின்’ என்ற இணையத் தொடரில் நடித்துள்ள மீனா, அந்த தொடரின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு பதிலளித்தார். தன்னைப் பற்றிய இத்தகைய செய்திகள் மிகவும் வேதனை அளித்ததாகவும், உண்மைத் தகவல்களை சரிபார்க்காமல் பரப்பப்படும் வதந்திகள் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “நான் ஒரு பெண் என்பதற்காகவும், தனியாக வாழ்கிறேன் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் எழுதலாம், கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைப்பது தவறு. இல்லாத விஷயங்களை உருவாக்கி பேசுவது மிகவும் வருத்தமளிக்கிறது. தற்போது இத்தகைய செய்திகளைப் பார்த்தால் சிரிப்பே வருகிறது,” என்று கூறினார். இதன் மூலம் தனது இரண்டாவது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு நடிகை மீனா தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading