அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் ஹார்டின் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகனாக சனந்த் நடிக்க, நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடித்துள்ளனர்.இதில், நடிகை இமயா தமிழக நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவின் மகள் ஆவார். அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த படிப்பை முடித்தவர் நடிப்பிலும் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். ஹார்டின் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானதுடன் இப்படத்தில் திரைக்கதை பணிகளையும் மேற்கொண்டுள்ளாராம்.
Add a Comment
