சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் என்ன செய்தாலும் அதைக் கவனித்து விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. விமர்சனங்களுக்குப் பதிலளித்தாலும் பிரச்சினை, பதிலளிக்காவிட்டாலும் பிரச்சினை என்ற சூழலில், சமூக வலைதள விமர்சனங்கள் மற்றும் தனது தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு திரைப்படத்தைப் பார்த்த பிறகு அது பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதையும், படத்தில் சில விஷயங்கள் ஏன் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்வையாளர்கள் விவாதிக்க வேண்டும் என்றார். திரைப்பட விமர்சனங்கள் அவசியம் என்றும், அவை ஆரோக்கியமான விவாதங்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாகவோ, பணம் பெற்றுக்கொண்டோ சிலர் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அனுபமா, அத்தகைய கருத்துகளுக்குத் தன்னால் பதிலளிக்க முடியாது என்றார். அதே நேரத்தில், ஒருவர் ஒரு கருத்தை முன்வைத்து விவாதித்தால் அதில் பங்கேற்கவும், விமர்சனங்களைக் கேட்கவும் தனக்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். ஆரோக்கியமான விவாதங்களே வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார்.

மேலும், சமூக வலைதள விமர்சனங்களுக்குப் பதிலளிக்காவிட்டால் திமிர் என்று கூறுகிறார்கள்; பதிலளித்தால் வேறு வேலையில்லையா என்று கேட்கிறார்கள் எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தனக்குப் பிடித்த பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிப்பதிலும், கருத்துகளைப் பதிவிடுவதிலும் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

அன்பு, மகிழ்ச்சி, நன்றியுணர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த ஏன் வெட்கப்பட வேண்டும் என்றும், தனக்குப் பிடித்த ஒரு பதிவில் கருத்துத் தெரிவிக்க மற்றவர்களிடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஓய்வு நேரம் இருக்கும்போது, அது இல்லாததுபோல ஏன் நடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அனுபமா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading