மாலத்தீவில் நடிகை வேதிகா… வைரலாகும் சுற்றுலாப் புகைப்படங்கள்!

‘முனி’, ‘சக்கரகட்டி’, ‘காளை’, ‘பரதேசி’, ‘காவியத் தலைவன்’, ‘காஞ்சனா 3’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை வேதிகா. குறிப்பாக, சிம்புவுடன் இணைந்து ‘காளை’ படத்தில் இடம்பெற்ற ‘குட்டி பிசாசே… குட்டி பிசாசே…’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் வேதிகா, சமூக வலைதளங்களிலும் தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு எடுத்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீல நிறக் கடல், அழகிய கடற்கரை என இயற்கை எழில் நிறைந்த இடங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடற்கரையின் பின்னணியில் வேதிகா பகிர்ந்துள்ள படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading