படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் உணவு சமைத்து கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

தெலுங்கில் ‘சங்கராந்திகி வஸ்துனம்’ என்ற படத்திற்கு பிறகு தற்போது ‘ஓ சுகுமாரி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். திருவீர் நாயகனாக நடிக்கிறார். குடும்பப் பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு ஸ்பாட்டிலேயே யூனிட்டை சேர்ந்தவர்கள் தோசை சுட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் தோசை சுட்டு உள்ளார். இணைய பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading