அனுபமா நடித்துள்ள ‘லாக் டவுன்’ படத்தை பாராட்டிய நடிகை தேவயானி!

லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘லாக் டவுன்’ படத்தை நடிகை தேவயானி சிறப்பு திரையிடலில் பார்த்துள்ளார். பின்பு படம் குறித்து பேசிய அவர், “படம் ரொம்ப எமோஷனலா இருக்கு. அனுபமா ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. டைட்டிலே பார்த்தீங்கன்னா, உண்மை சம்பவத்தை வைத்து இந்த படத்த எடுத்திருக்காங்க. லாக்டவுன் சமயத்துல ஒரு பெண்ணோட போராட்டம்தான் கதை. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading