கடந்த 2022ல் ராய் லட்சுமி நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக ‘ஜனதா பார்’ என்கிற படம் வெளியானது. அந்தப் படம் வெளியான சமயத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் மவுத் டாக் மூலமாக அந்த படம் குறித்து தகவல் பரவியதால் தற்போது அந்த படத்தை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து அதே பெயரில் வெளியிடுகிறார்கள். ஸ்போர்ட்ஸ் பின்னணியில் பழிவாங்கும் கதையாக ரமணா மோகிலி என்பவர் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் ராய் லட்சுமி அடிதடி ஆக்சன் காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளார். ஹிந்தி ரிலீஸை தொடர்ந்து மலையாளத்திலும் ராய் லட்சுமிக்கு என ஒரு மார்க்கெட் இருப்பதால் அங்கேயும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
Add a Comment
