55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘மைலா’ திரைப்படம்!

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகை செம்மலர் அன்னம். தற்போது அவர் இயக்குனராக அவதாரம் எடுத்து ‘மைலா’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து உள்ளார். இந்தப் படம் கிராமம் தோறும் சைக்கிளில் சென்று பாய் வியாபாரம் செய்யும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை ஆகும்.தற்போது இந்த படம் 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் ‘பிரைட் பியூச்சர் பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இது குறித்து செம்மலர் அன்னம் கூறும்போது, இந்தத் தேர்வு, உலகம் முழுவதிலும் இருந்து புதிய (சிந்தனைக்)குரல்களை கண்டறியும் நோக்கத்தின் விளைவாக அமைந்துள்ளது. ‘மயிலா’, பணியாற்றும் பெண்களின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மையமாகக் கொண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்கள் மீது கொண்டுள்ள பார்வைகளையும் தெளிவாகச் சித்தரிக்கிறது என்றார்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading