ரீ ரிலீஸான அஜித்தின் ‘மங்காத்தா’… கொண்டாடும் ரசிகர்கள்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்து 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. இந்தப் படத்தின் மூலம் நடிகர் அர்ஜுன், அஜித்துடன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை ‘மங்காத்தா’ பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித், நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு, ‘மங்காத்தா’ படம் ஒரு பெரிய ‘கம்பேக்’ ஆக அமைந்தது. இதுவரை கதாநாயகனாக மட்டுமே கொண்டாடி வந்த ரசிகர்கள், அவரை வில்லன் சாயலில் கொண்டாட வைத்த திரைப்படமாக ‘மங்காத்தா’ அமைந்தது. அந்த வகையில், அஜித்தின் திரை வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்தை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து, பட்டாசு வெடித்தும், மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading