சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘புருஷன்’. விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’, ‘ஆக்ஷன்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மீண்டும் இந்த கூட்டணியில் உருவாகும் ‘புருஷன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ‘ஆம்பள’ திரைப்படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் மீண்டும் ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
‘புருஷன்’ திரைப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில், நடிகை தமன்னா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், சுந்தர்.சி – விஷால் – ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் மீண்டும் இணையும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதன் மூலம், படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
