இந்தியா உங்கள் தாய்… ஏ‌ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எம்‌.பி மகுவா மொய்த்ரா!

பாலிவுட் திரையுலகம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்  பாலிவுட் திரையுலகம் குறித்து தெரிவித்த கருத்துகள் கடந்த சில தினங்களாக சினிமா வட்டாரத்தில் மட்டும் இன்றி அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளானது. தனது கருத்து பேசு பொருளான நிலையில், வீடியோ மூலம் ஏஆர் ரகுமான் விளக்கமளித்து இருந்தார்.  இந்த விவகாரத்தில் ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா ஏஆர் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகுவா மொய்த்ரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்தியா உங்கள் தாய்: நீங்கள் மவுனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முகம்மது அலி போன்ற உலகப்புகழ் பெற்ற நட்ச்த்திரங்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றே எதிர்த்தனர். நீங்களும் துணிச்சலாக இருங்கள்” என்று கூறியுள்ளார்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading