ஜே .ஆர் சினி வேர்ஸ் சார்பில் டாக்டர் ராஜேந்திரன், ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படம் ‘எம்ஜி 24′. அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார்.’சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ‘ஸ்ட்ரைக்கர்’ படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ‘மயிலாஞ்சி’ படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘விசாரணை’ படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் பிம்மிசிவா, அர்ஜுன் கார்த்திக், பிரபாகரன் நாகராஜன், யுவராஜ், காளியப்பன், சுரேஷ் பாலஜி, பார்பர் பாலு, ஜெயஸ்ரீ ஸ்ரீதரன், சீனு ஆகியோர் நடித்துள்ளனர்.
Add a Comment
