நடிகர் விநாயகன் ஆடு 3 படப்பிடிப்பின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில்,தயவுசெய்து கர்மா பற்றி எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். என்னை என் நேரம் தான் தீர்மானிக்கும். நான் ஒன்றும் என்னுடைய கெட்ட செயல்களுக்காக இந்த காயத்தை அடையவில்லை. என்னுடைய வேலை நேரத்தில், தங்களை மிகுந்த அறிவார்ந்தவர்கள் போல் காட்டிக்கொண்ட ஒரு சிலரை நம்பியதால் தான் இது நடந்தது. என்னுடன் உறுதுணையாக நிற்பவர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை என்று கூறியுள்ளார்.

