விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக நடித்த குஷி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, விரைவில் பங்காராம் என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். அதோடு ஏற்கனவே சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்தவர் மீண்டும் டிகே – ராஜ் இயக்கும் ஒரு வெப் தொடரிலும் நடிக்கிறார். தனது உடல் கட்டை பராமரிப்பதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா, ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்து வருகிறார். அது குறித்த வீடியோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் தற்போது 110 கிலோ எடையை தூக்கி உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. அதோடு, “Go big or go home” என்று குறிப்பிட்டுள்ளார்.
