Saturday, September 14, 2024

11 வருடங்களுக்கு பிறகு வெளியாகிறதா சுந்தர் சி-ன் ‘மத கஜ ராஜா’ திரைப்படம்? கசிந்த தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக நடித்த படம் ‘ரத்னம்’. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பின்னர், முத்தையா இயக்கத்தில், குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன் ஆகிய படங்களில் நடித்தார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷாலே இயக்க முடிவு செய்தார். இதற்கான படப்பிடிப்பில் விஷால் பிஸியாக இருந்தார்.

இதற்கிடையே, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ‘மத கஜ ராஜா’ படத்தில் நடித்தார். இதில், விஷாலுடன் வரலட்சுமி மற்றும் அஞ்சலி நடித்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்தார். இப்படத்திற்காக விஷால் பாடிய பாடலின் வீடியோ வெளியாகியது. ஆனால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. பண பிரச்னைதான் காரணம் என்று கூறப்பட்டது.

அரண்மனை 4 பட ப்ரோமோஷனில், இப்படம் குறித்து கேட்டபோது, சுந்தர்.சி மேம்போக்காக பதிலளித்தார். தற்போது, ‘மத கஜ ராஜா’ ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News