Saturday, September 21, 2024

1000% அனிருத் தான் இந்த படத்திற்கு வேண்டும் என்று சொன்னேன்… அனிருத் என் மகனை போல் – நடிகர் ரஜினிகாந்த்! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜனிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன் படத்தின் இசைவெளியீட்டு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் குறித்துநானும் இயக்குனரும் பேசும்போது,இயக்குநர் என்னிடம் ‘100% அனிருத் தான் இப்படத்திற்கு வேண்டும் என்று சொன்னார். பதிலுக்கு நான் எனக்கு 1000% அனிருத்தான் வேண்டும் என்று சொன்னேன்.

நான் ‘மன்னன்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது ரவி ஒரு சிறுவனை அழைத்து வந்தார். அந்த சிறுவனை அங்கிருந்த சிம்மாசனத்தில் வைத்து ஃபோட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசையென்ற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அவரின் இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் வேகமாக தீர்ந்துவிடுகின்றன. அனிருத் என் மகனை போல் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் ரஜினிகாந்த்.

- Advertisement -

Read more

Local News