தமிழ் சினிமாவில் தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் சமூகம் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இயக்குனர்களில் ஒருவர் தான் பா.ரஞ்சித். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தற்போது இவரது இயக்கத்தில் வெளியான தங்கலான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மாபெரும் வசூலை ஈட்டி வருகின்றது. சமீபத்தில் தான் தங்கலான் படக்குழு வெற்றி விழாவை கொண்டாடியது. இதையடுத்து பா.ரஞ்சித் மாரி செல்வராஜின் வாழை பட விழாவில் பேசியது தான் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித் பேசுகையில், பெரியேறும் பெருமாள் நல்ல படம் என்கின்றனர். அப்போது கர்ணன் மற்றும் மாமன்னன் நல்ல படங்கள் கிடையாதா ? பெரியேறும் பெருமாள் படம் அனைவருக்கும் பிடித்தது. ஆனால் கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படம் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஹீரோ திருப்பி அடிக்கமாட்டார்.ஆனால் கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படத்தில் ஹீரோ திருப்பி அடிப்பார். ஹீரோ திருப்பி அடிப்பதால் ஒரு சிலருக்கு இப்படம் பிடிக்காமல் போயிட்டது போல என்றார் பா.ரஞ்சித். தற்போது இவர் பேசிய இந்த கருத்து தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.