ஜோதிகா சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஷைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள ஸ்ரீகாந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடையே னால வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில்,பல வருடங்களுக்கு பிறகு இந்தியில் நடிப்பது குறித்து ஜோதிகா பேசியுள்ளார்.
என்னுடைய முதல் படம் இந்தி படம் ஆனால் தியேட்டர்களில் அந்த சரியாக ஓடவில்லை. இது வழக்கமான ஃபார்முலாவில் இருந்தது. திரையுலகில் இரண்டாவது வாய்ப்பு வேண்டுமானால் உங்கள் முதல் படம் நன்றாக இருக்க வேண்டும். நான் நடிப்பை தொடர முடிவு செய்தபோது, பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களாக ஹீரோயின்களை செலக்ட் செய்துகொண்டு அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்தனர்.இப்படியிருக்க நல்லவேளையாக அந்த நேரத்தில் தென்னிந்திய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு பாலிவுட்டை விட்டு வெளியேறிவிட்டேன். நான் நடித்த ஹிந்திப் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் எனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு ஹிந்தி படங்களில் அதற்கு பின்னரும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பிறகு தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்தேன். பாலிவுட் மற்றும் கோலிவுட் இடையே பல வேறுபாடுகள் இருந்தன. பாலிவுட்காரர்கள் கூட என்னை தென்னிந்தியா நடிகை என்றுதான் நினைத்தார்கள். இனி இந்திப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.
தென்னிந்தியப் படங்களில் வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினேன்.நான் ஹிந்திப் படங்களைத் தவிர்க்கவில்லை.உண்மை என்னவென்றால் எனக்கு ஹிந்திப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் என கூறியுள்ளார்.அதேசமயம் ஸ்ரீகாந்த் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை முதலில் ஜோதிகா வேண்டாம் என்று தவிர்த்ததும், பின்னர் படத்தின் கதையை படித்த சூர்யா இப்படத்தில் நீ நடிக்க வேண்டும் என கேட்ட பிறகே இப்படத்தில் ஜோதிகா நடிக்க சம்மதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.