நடிகர் ரஜினிகாந்தின் “கூலி” படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஹைதராபாத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது, பின்னர் சென்னையில் வரும் 10ம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்கான பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று படக்குழு கூறியுள்ளது. ஹைதராபாத் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு புறப்பட்டு சென்றார், இதன் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்தன.
“பிகில்” படத்தில், ஒரு தலை காதலால் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகி, தொடர்ந்து புட்பால் மேட்ச்சில் சிறப்பாக செயல்படும் கேரக்டராக நடித்தவர் மோனிகா. “கூலி” படத்திலும் அவருக்கு முக்கியமான கேரக்டர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகும் “கூலி” படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு புரொமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.