Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வெளியான கல்கி ட்ரெய்லர்… மிரட்டலான தோற்றத்தில் வந்து மிரட்டிய கமல்ஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இந்திய சினிமாவின் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்றது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் உருவான இப்படத்தில், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்கி 2898 ஏ.டி படத்தில் பிரபாஸுடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ட்ரெய்லரைப் பார்க்கும்போது, கடவுள் சக்திக்கும் அறிவியல் சக்திக்கும் இடையிலான போராட்டத்தைப் போல் இருக்கிறது. ட்ரெய்லரின் இறுதியில் வரும் கமல் ஹாசன் பேசும் வசனமும், அவரின் மேக்கப்பும் ஆச்சரியப்படவைக்கின்றது.

குறிப்பாக அவர் பேசும் “பயப்படாதே, இன்னொரு பிரபஞ்சம் வருகின்றது” என்ற வசனமும், அதற்கு வைக்கப்பட்டுள்ள க்ளோசப் ஷாட்டும் மேலும் திரும்பிப் பார்க்க வைக்கின்றது. குறிப்பாக, ட்ரெய்லரில் வரும் வசனங்கள், பூமியில் தண்ணீர் தீர்ந்த பின்பு பூமியை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் பூமிக்கு வந்து பார்க்கும் போது அங்கிருப்பவர்களுடன் பேசுவது போலும், அவர்களுடன் மோதுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இரண்டு மூன்று கதைகள் பின்னிப் பிணைந்துள்ளதை உணர முடிகின்றது.

- Advertisement -

Read more

Local News