மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு, 8 இயக்குனர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர். இந்த ஆந்தாலஜி கதைகளுக்குப் “மனோரதங்கள்” என்று பெயரிட்டுள்ளனர்.
இதில், மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பிஜூ மேனன், நதியா, பார்வதி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்தொடரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதைகளுக்குமான அறிமுகத்தை நடிகர் கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இந்த ஆந்தாலஜி தொடர் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.