Tuesday, November 19, 2024

வெளியாகிறது கனா காணும் காலங்கள் தொடரின் மூன்றாவது சீசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கனா காணும் காலங்கள் முதலில் விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக ஒளிபரப்பாகி மாணவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து இதனை இணைய தொடராக வெளியிட முடிவுசெய்து முதல் சீசனும்‌ அதைதொடர்ந்து வெளியான இரண்டாவது சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும், இந்த சீரிஸின் மூன்றாவது சீசனை வெளியிட முடிவு செய்துள்ளது.முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், இன்றைய மாணவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் படம்பிடித்துக் காட்டும்படி உருவாகவுள்ளது.இந்த சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர்கள், குழுவினர் மற்றும் இந்த சீரிஸ் பற்றிய விவரங்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News