ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்த அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். அவரது குடும்பம் மிடில் கிளாஸ் குடும்பம்தான். சினிமாவில் வாய்ப்பு பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார். முக்கியமாக, அவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் அவரது கரியரில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. வளர்ந்துவரும் சமயத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி நினைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே கதாநாயகிகளை மையப்படுத்தி படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அந்த ஜானருக்குள் சென்றுள்ளனர். அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் உள்ளார். அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக அமைந்திருந்தன. அந்தப் படங்கள் போதுமான வரவேற்பை பெறவிட்டாலும், ஐஸ்வர்யாவின் கதை தேர்வு பலரையும் ரசிக்க வைத்தது.
தமிழில் மட்டும் நடித்துவந்த அவர் புலிமடா படத்தின் மூலம் மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக தமிழில் அவர் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இதற்கிடையே அவர் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர், மிஸ் மேட்ச், World Famous Lover, டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அங்கும் கதைக்கு என்ன தேவையோ அதற்கான கதாபாத்திரத்தை ஏற்றார். குறிப்பாக World Famous Lover படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார். அடுத்ததாக ஒரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீல நிற ஷார் ஸ்கர்ட்டில் இருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “அட செம அழகாக இருக்காங்களே” என்று கமெண்ட்ஸ் செய்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.