Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் பச்சன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் பிரபலமான நிஜ ஜோடியாக இருப்பவர்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன். “குரு, தாய் அக்ஷர் பிரேம் கே, குச் நா கஹோ, தூம் 2, உம்ராவ் ஜான்” போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 2007ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர், அவர்களுக்கு டீன் ஏஜ் வயதில் ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.

சமீபக் காலமாக, அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்துவிட்டார்கள் என்கிற செய்திகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கின்றன. அதன் பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள், அப்போதுதான் அந்த வதந்திகள் முடிவுக்கு வந்துவிடும். சமீபத்தில், அம்பானி இல்லத் திருமண விழாவில் ஐஸ்வர்யா, தனது மகளுடன் மட்டும் வந்ததால், பிரிவு குறித்த வதந்திகள் மீண்டும் பரவியது.

இந்த நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில், அதற்கான பதிலை அபிஷேக் பச்சன் வழங்கியுள்ளார். “நீங்கள் எல்லாரும் ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டீர்கள். ஏன் இதைச் செய்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. உங்களுக்கு நல்ல கதைகள் தேவைப்படுகின்றன. பரவாயில்லை, நாங்கள் பிரபலங்கள், இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மன்னிக்கவும், எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. நான் இப்போதும் திருமணமானவன்தான்,” என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News