பிக்பாஸ் 8வது சீசனின் தொகுப்பாளராக இருந்து கமல்ஹாசன் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக புதிய சீசனில் யார் தொகுப்பாளராக வருவார்கள் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. நடிகர்கள் சரத்குமார், சூர்யா, நடிகை நயன்தாரா ஆகியோர் இந்த லிஸ்ட்டில் உள்ளனர். இதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்புவின் பெயரும் அடிபட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னால் இருப்பவர் விஜய் சேதுபதிதான், ஏறக்குறைய இவர் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000065575.jpg)
இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்தநிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பிரமோவிற்கான படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000065486.webp)
பொதுவாக, இந்த நிகழ்ச்சி அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் துவங்கும். அதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாக நிகழ்ச்சியின் பிரமோ வெளியாகும். அதன்படி, செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழ்ச்சியின் பிரமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த பிரமோவில்தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நிஜமாக விஜய் சேதுபதியா அல்லது வேறு யாராவதானு தெரியும்…