Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விடுதலை 2-ல் கேமியோ ரோலில் நடிக்க போகும் பிரபலம்? வெளியான சுவாரஸ்ய தகவல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த படம் ‘விடுதலை’. இதில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘விடுதலை -1’ அற்புதமான வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக கொண்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. ‘விடுதலை பாகம் 1′ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.’விடுதலை பாகம் 2’ சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியை வைத்து இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு செய்ய வேண்டியதுள்ளது.

அவர் பல மொழிகளில் பல படங்களில் நடிப்பதால், 20 நாட்கள் கால்ஷீட் வழங்க முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகிய நிலையில், தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.இந்நிலையில், படத்தைப் பற்றிய இன்னொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

‘விடுதலை 2’ படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எஸ்.ஜே சூர்யா எந்த விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News