மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் “விடாமுயற்சி.” இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்புக்கு முன்பு, பல மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது, இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக இருக்கின்றது. அந்த பாடலை ஸ்பெயின் நாட்டில் சென்று படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும், படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளிக்கு வெளியிடப்பட வேண்டும் என்ற திட்டத்தின் படி, இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த “அமரன்,” ஜெயம் ரவியின் “பிரதர்,” மற்றும் கவின் நடித்த “பிளடி பெக்கர்” போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், “விடாமுயற்சி” திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படுவது உறுதியாக இருந்தால், மற்ற படங்கள் ரேஸிலிருந்து பின்வாங்க வாய்ப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.