Tuesday, November 19, 2024

விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் நீளம் என்ன தெரியுமா? வெளியான புது தகவல்! #TheGoat

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “தி கோட்” படத்தின் சென்சார் முடிவடைந்துள்ளது. இப்படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபகாலங்களில், நீளமான படங்களை ரசிகர்கள் ரசிக்க தயங்குவதால், சில காட்சிகளை நீக்குவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, “இந்தியன் 2” படத்தின் நீளம் முதலில் 3 மணி நேரமாக இருந்த நிலையில், பின்னர் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டது.

விஜய் நடித்த அண்மைய படங்களின் நீளத்தைப் பார்க்கும்போது, ‘லியோ’ 2 மணி நேரம் 44 நிமிடங்கள், ‘வாரிசு’ 2 மணி நேரம் 50 நிமிடங்கள், ‘பீஸ்ட்’ 2 மணி நேரம் 35 நிமிடங்கள், ‘மாஸ்டர்’ 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என பல படங்களின் நீளம் கூட 2 மணி நேரத்தை தாண்டியுள்ளது. இவை வசூலில் வெற்றி பெற்றுள்ளதால், ‘தி கோட்’ படத்தின் நீளத்தை அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று படத்தினை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு அப்டேட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News