Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விஜய்யின் திருப்பாச்சி பட தலைப்புக்கு காரணம் வைரமுத்து சார் தான் – இயக்குனர் பேரரசு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காட்டமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் “வேட்டைக்காரி.” இந்த படத்தில் புதுமுக நடிகர் ராகுல் மற்றும் நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, “சில நாட்களுக்கு முன்பு ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டேன்.அப்போது அந்த படத்தின் தலைப்பை வைரமுத்து வைத்ததாக கூறினார்கள். அதேபோல், ‘வேட்டைக்காரி’ படத்திற்கும் வைரமுத்து சார் தலைப்பு வைத்ததாக காளிமுத்து கூறினார். வைரமுத்து சார் பாடல் வரிகள் மட்டுமல்ல, தலைப்புகளையும் வழங்குகிறார்.தமிழ் பட தலைப்புகளுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொள்கிறார்.

அதனால், தற்போதைய படங்களுக்கு அவர் நேரடியாக தலைப்புகள் வைக்க ஆரம்பித்துள்ளார். இந்நேரத்தில் நான் ஒரு உண்மையை பகிர விரும்புகிறேன் – ‘திருப்பாச்சி’ தலைப்பையும் வைரமுத்து சார் தான் கொடுத்தார்.”திருப்பாச்சி”க்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம், அதை விஜய் சார் மற்றும் சௌத்ரி சார் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் பதிவு செய்யும்போது, அந்த தலைப்பு வேறு ஒருவருக்கு இருந்தது, அதனால் நாம் அதை பெற முடியவில்லை. குழப்பத்திலிருந்தபோது, தொலைக்காட்சியில் “திருப்பாச்சி அருவாள தூக்கிக்கிட்டு வாடா…வாடா” என்ற பாடலை பார்த்தேன். அப்போது, என் பட நாயகனும் அருவா செய்பவர் என்பதால், ‘திருப்பாச்சி’ என்று தலைப்பை மாற்றினேன். எனவே, எனக்கும் தலைப்பு கொடுத்தவர் வைரமுத்து சார் தான்,” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News