நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகியோர் புதிய ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளனர். இந்த தொடரை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த தொடருக்கு ‘முத்து என்கிற காட்டான்’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
இந்த வெப் தொடர் ஒரு கிராமத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும், மிகப் பெரிய பட்ஜெட் தொடராக இருக்கிறது என்கின்றனர். இதற்கிடையில், இதில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், நடிகர் யோகி பாபு இந்த தொடரில் குணசித்திர வேடத்தில் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது. ஜாக்கி ஷெராப் இதற்கு முன்பு தமிழில் ‘ஆரண்ய காண்டம்’, ‘பிகில்’, ‘ஜெயிலர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.