Tuesday, November 19, 2024

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குகிறாரா மாகமுனி பட இயக்குனர்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சாந்தகுமார் மௌனகுரு, மகாமுனி படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சாந்தகுமார். அவருடைய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது சமீபத்திய ரசவாதி திரைப்படம் அர்ஜுன் தாஸ் தான்யா ரவிச்சந்திரனின் நடிப்பில் வெளியாகியது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

விக்ரம் தற்போது சித்தா இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் 63 படத்தின் கதையை இயக்குநர் சாந்தகுமார் கூறியுள்ளதாகவும், விக்ரமுக்கு கதை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சாந்தகுமார் தில், தூல் படத்தின்போது உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார்.

வித்தியாசமான கதைகளை கையில் எடுக்கும் சாந்தகுமார் விக்ரமோடு இணைந்தால், நிச்சயமாக மிகப்பெரிய நல்ல கதையுள்ள வெற்றி படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News