Thursday, April 25, 2024

‘வாவ் வெரி க்யூட்’ ஜோடி! 24ம் ஆண்டு திருமண நாளை விமர்சையாக கொண்டாடிய அஜித்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் இனிமையான நாளான திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்ங தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாள் மற்றும் மகனின் பிறந்தநாள்ளை கொண்டாடினார்.

சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டார் ஓட்டலில் தனது மனைவியுடன் 24வது ஆண்டு திருமண நாளை அஜித்குமார் கொண்டாடியுள்ளார்.அந்த ஓட்டலுக்கு அவர் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதேப்போல இந்த திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் குமார் உட்கார்ந்து இருப்பது போலவும் அவர் மடிமீது ஷாலினி சாய்ந்து கொண்டு போஸ் கொடுப்பது போலவும் ஒரு ஃபோட்டோ வெளியானது அந்த ஃபோட்டோவை கண்ட ரசிகர்கள் சோ க்யூட் என தங்கள் மகிழ்ச்சிகளையும் திருமண நாள் வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

வருகின்றன வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினமன்று நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.இம்முறை அஜித் குமாரின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட அவர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.அடிக்கடி அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

- Advertisement -

Read more

Local News