மலையாள நடிகர் நிவின்பாலி கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து, இறங்குமுகத்தில் இருந்தார். ஆனால், இந்த வருடம் வெளியான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ மற்றும் ‘மலையாளி பிரம் இந்தியா’ ஆகிய படங்கள் கிடைத்த வரவேற்பு அவரை சரிவிலிருந்து மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், இயக்குனர் ராம் இயக்கத்தில் அவர் தமிழில் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வெளியாகும் போது, மீண்டும் தனது முன்னைய இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மீண்டும் பிஸியாகியுள்ள நிவின்பாலி அடுத்ததாக ‘சேகர வர்ம ராஜாவு’ என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்கிற வரலாற்று படத்தில் நடித்த நிவின்பாலிக்கு இது இரண்டாவது வரலாற்று படம் ஆகும்.
கேரளாவில் பிரபலமான சேகர வர்ம ராஜாவின் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடிக்கிறார். இந்தப் படத்தை அனுராஜ் மனோகர் இயக்குகிறார்.