Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வணங்கான் படத்தில் பிண்ணனி இசையமைக்க கமிட்டான சாம்.சி.எஸ்…. அப்போ ஜி.வி.பிரகாஷ் ? #Vanangaan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‘வணங்கான்’ படத்தை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. இப்போது, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால், ஜி.வி. பிரகாஷ் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால், வணங்கான் படத்திற்கு பின்னணி இசையமைக்க முடியவில்லை என கூறப்பட்டது. இதனால், பின்னணி இசையமைப்பதற்காக சாம்.சி.எஸ். இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் வேதா, கைதி, பார்கிங் போன்ற படங்களில் சாம்.சி.எஸ். இசையமைத்த பின்னணி பெரிதாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News