Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

லப்பர் பந்து திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது எஸ்.ஜே.சூர்யாவா? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வெளியானது. தமிழரசன் ஏற்கனவே ‘கனா’ மற்றும் ‘எப்.ஐ.ஆர்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார், மேலும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு வசனம் எழுதியவர். சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவான ‘லப்பர் பந்து’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இப்படத்தை பாராட்டி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவுகளைப் பகிர்ந்தனர். மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து படக்குழுவை பாராட்டினார்.

ஆரம்பத்தில், இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டும் எனக் கருதப்பட்டவர் எஸ்.ஜே. சூர்யாவாம். ஆனால், சற்று வயதான தோற்றத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல், மற்றும் சில காரணங்களால், அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதேபோல் நட்டி மற்றும் ஹிப் ஹாப் ஆதி இவர்களும் முதலில் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கடைசியில் சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News