Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தயாராகிறதா சில்லுனு ஒரு காதல் 2 ? கவின் தான் ஹீரோவா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2006 ஆம் ஆண்டில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த “சில்லுனு ஒரு காதல்” படம் வெளியானது. இந்த படத்தை ஒபேலி N கிருஷ்ணா இயக்கினார். இன்றுவரை, இந்த படம் பலரின் விருப்பமான படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சூர்யா, சாக்லேட் பாய் கணவராகவும், காதலனாகவும் நடித்தது ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

இப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.அதன் பின்னர், ஒபேலி N கிருஷ்ணா, சிம்பு நடித்த “10 தல” என்ற படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்றார். இப்போது, அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.நேற்று பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இப்படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.எந்த நடிகர்கள் இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதற்கான தகவலும் இன்னும் வெளிவரவில்லை.

ஆனால், இப்படம் “சில்லுனு ஒரு காதல்” படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இதில் நடிகர் கவினை ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News